மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 29 மே, 2014

காசு..துட்டு.. மணி..மணிணி...

                           நேரமாவதைக் காட்டும் கைகடிகாரத்தின் முள்ளையும் பேருந்து வரும் பாதையையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டே








நின்று கொண்டிருந்தாள் அவள். ”நேரமாச்சே, இன்னும் பஸ்ஸ காணோமே.. என்ன பண்றது? என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். இனியும் தாமதித்தால் சரியான நேரத்துக்கு போக முடியாது என்பதை உணர்ந்தவளாய் மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.

                          ” இன்னும் எவ்ளோ தூரம்தா நடக்குறது. இந்த பஸ் என்னைக்கும் இல்லாம இன்னைக்குதா இப்டீ  என் உயிரா வாங்கணுமா..ச்சசச....” வேர்க்க விறுவிறுக்க நடந்து கொண்டே சலித்துக் கொண்டாள்.

                            ”.இன்னைக்கு அந்த பெரிசு வேற சீக்கிரம் வர சொன்னுச்சு. லேட்டா போனா அந்த சொட்ட மண்ட  வல்லு வல்லுனு விழும்” என்று தனது மேலதிகாரியையும் வசை பாடிக்கொண்டே நடந்தவளின் மனம் யாராது வண்டில வந்தா லிப்ட் கேட்டாது போலாம்னா ஒரு ஈ காக்கா கூட  காணோம்.. என்று புலம்பிக்கொண்டே நடந்தாள்.

                            ”இன்னிக்கு யார்  மூஞ்சில முழுச்சேனே தொியல. ச்சச.. எதுவுமே ஒழுங்கா நடக்கமாட்டேங்குது  காலைலிருந்து எல்லாம் லேட்.. என்று தன்னைதான் இன்று கண்ணாடியில் பார்த்தோம் என்பதையும் மறந்து அவளையே திட்டிக்கொண்டு, யாரும் வரமாட்டாங்களா ? என்று பரிதாபமாய்த்  திரும்பிப் பார்த்தவளின் கண்களில் தூரத்தில் ஒரு ஆட்டோ வருவது தென்பட்டது.. பனித்துளி கண்ட இலைநுனிப்போல் குதுகலமானாள்.

                               ஆட்டோவைப் பார்த்த அடுத்த நொடி அவளின் மனம் கணக்குப் போட தொடங்கிவிட்டது... இங்கிருந்து பஸ் ஸ்டாப்புக்கு முப்பது ரூபாய்க்கு மேலல கேப்பாங்க. பரவாயில்ல இன்னிக்கு  தண்டம் கட்டணும்னு இருக்கு. என்ன பண்றது நேரமாயிட்டே இருக்கு. வேற வழியில்ல  ஆட்டோல போயாது பஸ்ஸ பிடிக்கணும் எண்ணியவளாய் ஆட்டோவைக் கையசைத்து நிறுத்தினாள்.

                                   அவள் கையசைவை ஏற்றுக் கொண்டது போல் ஆட்டோவும் அவள் முன் வந்து நின்றது. அண்ணா பஸ்ஸடாப்  போகணும் என்றவளிடம் போலாம்மா ஏறிக்குங்க என்றார் ஆட்டோக்காரர்.. இந்த பகுதியில் அவ்வளவாக எந்த வாகனமும் நிற்காது என்பது அவளுக்குத் தெரியும்.   ஆட்டோக்காரர் எவ்வளவு கேட்கப்போகிறாரோ என்று அவளுக்குள் மிகப் பெரிய கருத்து விவாதமே நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதற்கிடையில் அம்மா பஸ்ஸடாப் வந்திடுச்சு என்று ஆட்டோ டிரைவரின குரல் அவளது விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

                                     எவ்ளோ அண்ணே ஆச்சு என்றவளின் மனதில் அவர் கேட்கும் ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய்க் குறைத்துத் தர வேண்டும் என்ற எண்ணம் நிறைந்திருந்தது. அவள் எதிர்ப்பார்த்ததை விட ஆட்டோ டிரைவர் பத்து ரூபாய் குறைவாகக்கேட்டார். இதை அவள் எதிர்ப்பார்க்கவில்லை. அவளும் அவர் கேட்ட ரூபாயிலிருந்து ஐந்து ரூபாய் கூடுதலாகக் கொடுத்தாள்.

                                  அம்மா அஞ்சு ரூபா அதிகமா இருக்கும்மா.. என்று சொல்லியவாறே அந்த நோட்டை நீட்ட, இல்லைண்ணா தெரியும் நீங்களே வச்சுக்கங்க என்று சொல்லிவிட்டு வேகமாக அவள் எதிர்ப்பார்த்த பஸ்ஸை நோக்கி ஓடினாள்.

                                 ஆட்டோ டிரைவர்,  இன்னும் அஞ்சு ரூபா கூட சொல்லிருக்காலமோ  என்று நினைத்தவராய் ஆட்டோவைத் திருப்ப, அவளும் அந்த அஞ்சு ரூபாய அவசரப்பட்டு குடுத்துட்டமோ என்றவளாய் பேருந்தில் அமர்ந்தாள்...................

4 கருத்துகள்:

  1. வணக்கம்! மிக எதார்த்தமான கதையோட்டம். காட்சிகளைக் கண்களில் கொண்டு வரும் ஒரு எழுத்து நடை வெகுவாக கவர்கிறது. நம்மைப் போன்ற இளைஞர்கள் நமது முன்னவர்களின் வழிதடத்தில் இணைந்து பயணித்து தமிழுக்கு பணியாற்றுவோம். நம்மையும் செம்மைப்படுத்தி கொள்வோம். தொடர்ந்து எழுதுங்கள். அதற்கான ஆற்றலும் சிந்தனையும் தங்களிடம் நிரம்ப இருப்பதை உணர்கிறேன். நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  2. தமிழ் ஆளும் அழகே படம் அழகாக உள்ளது. கருத்திடுவதற்கு சுமையாக இருக்கும் word verification ஐ நீக்கி விடுங்கள். add a gadgets சென்று followers பகுதியை இணைத்து வையுங்கள். அப்பொழுது தான் தங்களை மற்றவர்கள் பின் தொடர வசதியாக இருக்கும். உதவி தேவையென்றால் என்னை உட்பட நம் நண்பர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி பாண்டியன் சார்.. எனது கதைக்கு முதன்முதலாக ஒரு பின்னூட்டம் உங்கள் மூலமாகக் கிடைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகுந்த யோசனைக்கு பிறகுதான் இதை பதிவேற்றம் செய்தேன். நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  4. word verificationa ஐ எவ்வாறு நீக்குவது சார்? முயற்சி செய்தேன் தெரியவில்லை

    பதிலளிநீக்கு