மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 28 நவம்பர், 2014

வாருங்கள் ... விளையாடுவோம்...


  

    

                     அன்பு உள்ளங்களுக்கு என் அன்பான வணக்கம்.. சில காலம் தொலைந்து போயிருந்த என்னைத் தேடி கண்டுபிடிக்க நாள்கள் பல சென்றுவிட்டன..மீண்டும்
எதையாவது எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடன் நான்..
                   அனைவரும் நலம்தானே.நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்... 

                    சரி விசயத்துக்கு வர்றேன்.. நான் இன்னும் ஒரு தலைமுறையைக் கடக்கவில்லை (ஒரு தலைமுறை என்பது 30 வருடங்கள் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்..தெரியாவிட்டாலும் தவறு ஏதுமில்லை )..ஆனால் என் தலைமுறையிலேயே என் தம்பி தங்கைகள் சொல்லில் அடங்கா இன்பங்களை தொலைத்துவிட்டார்களோ என்ற ஆதங்கம் என்னுள்..

                 அப்படி என்ன இன்பத்தைத் தொலைத்துவிட்டார்கள் என்று நீங்கள் கேட்பது என் ஏழாம் அறிவிற்கு விளங்குகிறது (நா கொஞ்சம் வாயடி.. இந்த மாதிரி இடையில ஏதாது வரும் கண்டுக்காதீங்க)

                  இன்று பெரும்பாலான குழந்தைகள் பாடப்புத்தகங்களுக்குள்ளும் தொ(ல்)லை பேசிகளுக்குள்ளும் கணிணி வீடியோ கேம்களுக்குள்ளும் தொலைந்து போய்விட்டார்களோ என்ற ஆதங்கம் தான் என்னுள்..என்னதான் நம்ம வலைப்பக்கத்தில் எழுதுவது என்று யோசித்த போது விளையாட்டாய் கண நேர சிந்தனையில் கண்சிமிட்டியது விளையாட மறந்த இன்றைய என் தம்பி தங்கைகளின் விபரீத நிலை...(இநத புள்ளைக்கு புத்தி கித்தி கெட்டுப்போச்சா.. புள்ளங்கள படி படினு நாங்க சொல்லிட்டிருக்கோம்..இது என்னடான்னா விளையாடாதது விபரிதம்னு சொல்லுதுன்னு யாரோ திட்ற மாரியே... இருக்கு...)

                கள்ளம் கபடமில்லா குழந்தைப் பருவத்தின் முகவரி அவர்களின் விளையாடும் அழகுதான்..நான் சிறுவயதில் முழு ஆண்டு விடுமுறைக்கு என் பாட்டி வீட்டுக்கு வந்ததும் என் சக தோழர்-தோழிகளுடன் கண்ணாமூச்சியாட்டம்,கிளித்தட்டு,நொண்டி,கடலா?கரைய? இன்னும் மறந்து போன விளையாட்டுகளை விளையாண்டதும் என் நினைவை விட்டு அகலவில்லை. மாலை நேரத்தில் வீட்டு வாசலின் முன்னே கூட்டம் கூட்டமாய் நாங்கள் விளையாடியது போல் இன்று எந்த வீட்டு வாசலின் முன்னும் ஒரு பிஞ்சுக்காலையும் காணவில்லை..

                                                             
                 பள்ளிகளில் கூட விளையாட நேரமில்லையோ (நானே கூட பி.டி. பீரியடை கடன் வாங்கி பாடம் நடத்தியதுண்டு)..இன்னும் நினைவிருக்கிறது நாங்கள் ஆறேழு பேர் ஒன்றுசேர்ந்து ”ஒரு குடம் தண்ணி ஊத்தி” கொல கொலயா முந்திரிக்கா நரிய நரிய சுத்திவா” கிளத்தட்டு”, கிச்சுக் கிச்சுத் தாம்புலம்” என விளையாடியது..(சைக்கிள் டயர்தான் எங்கள் ஊஞ்சல்)
                                             

             மரங்களில் ஊஞ்சல் கட்டி விளையாடியது மறக்க முடியாத நினைவுகள்.. ஆனால் இன்றுள்ள உள்ள குழந்தைகள் மொபைல்களில் டெம்பிள் ரன் 1, டெம்பிள் ரன் 2 , சப்வே சர்பேர்ஸ், ஆங்கிரி பேர்ட்ஸ் (இதன் பட்டடியல் இன்னும் நீண்டு கொண்டே போகிறது) போன்ற விளையாட்டுகளை விளையாடி தங்களின் குழந்தைப் பருவத்தை பலியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.... 

                  இது போன்ற விளையாட்டுகளால் அவர்களின் கண்பார்வை கெடுவதுடன் அவர்கள் முழுச் சோம்பேறிகளாய் மாறிக் கொண்டு வருகிறார்கள்.. தெருக்களில் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதைப் பெற்றோரே விரும்பாதது வருத்தத்திற்குரியது.. மொபைல்களிலும் கணினியிலும் எத்தனை வயது வரை வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால் குழந்தைப்பருவத்தில் கூடி விளையாடுவதை இழந்தால் என்றுமே அதை நம்மால் திருப்பித் தர முடியாது..

                                 
கிள்ளிக் கிள்ளிப் பிறாண்டி
கீயா மாயாப் பிராண்டி
கொப்பன் தலையில் என்ன பூ....
{முருங்கைப்பூ)
முருங்கைப்பூவைத் திண்டவளே
முன்னடிக் கஞ்சி குடிச்சவளே
பாதி விளாங்காய் திண்டவளே
பாவட்டங் கையை ம-ட-க்-கு.

 (நன்றி விக்கிபீடியா) இது போன்ற பாடல்களைப் பாடிக் கொண்டு விளையாண்ட காலம் எல்லாம் சுட்டெழுத்து ”உ” ஆக மறைந்து போனது ( உ என்பது முன்னர் நம் தமிழர் பயன்படுத்திய அது , இது போல் ஒரு சுட்டெழுத்து)...

             வாருங்கள் குழந்தைகளின் பருவத்தை அவர்களிடமிருந்து திருடாமல்.. அவர்களுடன் சேரந்து நாமும் குழந்தைகளாவோம்...விளையாடுவோம்

18 கருத்துகள்:

  1. பழமையில் மூழ்கிவிட்டேன் ஆம் இப்பொழுது குழந்தைகள் விளையாடாமல் சோம்பேறிகளாகி வருவது உண்மையே
    அன்றே பாடினான் செல்லம்மா புருஷன்
    ஓடி விளையாடு பாப்பா
    நீ ஓய்திருக்கல் ஆகாது பாப்பா
    என செல்போண் வரவுகளால் குழந்தைளின் பார்வையும் மங்கி வருகிறது 15 வயதிலேயே கண்ணாடி அணியும் பழக்கம் வந்து விட்டது நல்லதொரு சமூக அலசலை கையிலெடுத்தமைக்கு நன்றி நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தரவும் நன்றி
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ..அவசியம் தங்களின் குடிலுக்கு வருகிறேன்.. கருத்துக்கு நன்றி சகோ

      நீக்கு
  2. ரேவதி!!!!! தல ஸ்டைல சொல்லுடா"" I am BACKKKK" அருமையான, நகைச்சுவை இழையோடும் கட்டுரை.:)))))) இப்படி ஹை ஸ்கூல் டீச்சர்லாம் நல்லவங்களா இருந்தா பிள்ளைக ஏன் கவலைபடபோகுதுக:(((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள பாத்ததுக்கு பிறகுதான்கா எவ்ளோ வேல இருந்தாலும் பரவாயில்ல எழுதியே ஆகனும்னு முடிவு பண்ணினேன். நீங்களும் அப்பாவும் (நிலவன் அய்யா) எனக்கு சிறந்த வழிகாட்டிகள் அக்கா..உங்கள் வாழ்த்து உங்கள் தங்கைக்கு என்றும் தேவை அக்கா..

      நீக்கு
  3. மீண்டு வந்து சிறப்பான ஒரு பதிவை தந்தமைக்கு நன்றி! மாறிப்போய்விட்டது என்று சொல்லாமல் மாற்றத்தை நம்மில் இருந்து விதைக்கலாமே மேடம்? தவறாக நினைக்க வேண்டாம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறில்லை அய்யா..கண்டிப்பாக மாற்றத்தை நாம்தான் கொண்டு வரவேண்டும் என்பதை உணர்வேன் அய்யா..கருத்துக்கு நன்றி

      நீக்கு
  4. அருமைடா. இப்பத்தான் நீ என் மகள்.
    நீ தொலைந்துவிட்டாயே என்று மற்றவர்களிடம் வருத்தப்பட்டது போல உன்னிடம் உரிமையாகக் கேட்டதற்குப் பலனாய் நம் தமிழ்ப்பிள்ளைகள் தொலைத்துவரும் பல விளையாட்டுகளைக் கண்டுசொல்லியிருக்கிறாய் பார! இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். மைதிலி சொன்னதுபோல இவ்வளவு நல்லா எழுதுற நீ காணாமப்போனா வருந்தமாட்டமா? அவ்வபபோது நீ எழுதுவாய் என்னும் நம்பிக்கையில் உன் தளத்தை என்தளத்தில் இணைப்புக் கொடுத்துவிட்டுத்தான் பின்னூட்டமிடுகிறேன். நீ கேட்ட “உ“ பற்றித் தனியே ஒரு பதிவு போடுகிறேன் - உனக்காக. வந்து பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அப்பா..இனி எப்போதும் எந்த சூழ்நிலையிலும் என் எழுத்தைத் தொடர முயற்சிப்பேன்.. கண்டிப்பாக உங்கள் மகள் என்பதை என் எழுத்தின் மூலம் உணர்த்த முயற்சிப்பேன்.. உங்களைப் பின் தொடர்ந்து கொண்டேயிருப்பேன்.. உங்கள் எழுத்துகளைப் படிக்கும் போது என்னுள் ஒருவித புத்துணர்ச்சியை உணர்கிறேன்.. என் சுயநலத்திற்காக நான் உங்களைத் தொடர்வேன்.. நன்றி

      நீக்கு
  5. சரியாகச் சொன்னீர்கள்... நாம் முதலில் தொடங்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  6. அருமை..!மீண்டும் வந்ததற்கு வாழ்த்துகள் ..!
    வாருங்கள் சகோதரி ..என் "எண்ணப் பறவை'க்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா.. உங்கள் வருகையை உவகையுடன் ஏற்கிறேன்...நன்றி

      நீக்கு
  7. தங்கள் எழுத்துச் சாம்பிராணியில் எங்களின் பால்யங்களும் மணக்கின்றன.
    தற்பொழுதுதான் தங்கள் தளம் வருகிறேன்.
    இனித் தொடர்வேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா.. தங்களின் வருகைக்கு நன்றி.. தங்களைப் போன்ற பெரியோர்களின் வழிகாட்டுதல் என்னைப் போன்ற வளரும் கத்துக்குட்டிகளுக்கு அவசியம் அய்யா..(என்னைச் சாம்பிராணி என்றமைக்கு மீ்ண்டும் நன்றி அய்யா )))))))

      நீக்கு
    2. அய்யோ அப்படியா சொன்னேன்!
      சரி சரி அப்படியே இருக்கட்டும்..!
      பிறந்த எல்லா உயிர்களுமே ஒரு நாளில் சாம் பிராணி தானே...............?
      சாகாத பிராணி ஏதும் இருக்கிறதா என்ன..?
      பெரியோர் ....................................?????????????
      வழிகாட்டுதல்.............................?????????????
      கத்துக்குட்டி..................................????????????
      இதற்கும் விளக்கம் வேண்டுமா கவிஞரே!
      வேண்டாம விட்டுவிடுங்கள்!
      நாங்களும் கத்துக்குட்டிதான்!
      ஊமைக் கனவுகள் என்று இருப்பதால் கத்த மாட்டேன் என்று நினைத்துவிட்டீர்களோ?
      ஹ ஹ ஹா!
      சகோ..
      என்னைப் பெரியாளாக்கி விடாதீர்கள்..!
      தயவு செய்து!!!!
      நன்றி

      நீக்கு
  8. உங்கள் பதிலைப் படிக்கும் போது என்னை முந்திக்கொண்டு என் பற்கள் எட்டிப்பார்க்கிறது அய்யா மகிழ்ச்சியில் துள்ளி..... உங்களிடம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் அய்யா..என்றும் தொடர வேண்டும் உங்கள் சகோதரி...நன்றி

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    மீண்டும் வரவேற்கிறது. எனக்கு உண்மையில் மிக மகிழ்ச்சி. மிகவும் அழகான கட்டுரை. எழுத தொடரவும்.

    பதிலளிநீக்கு